Friday, May 15, 2009

எனது கேள்வி..இலங்கை தமிழர் பிரச்சினை முன் வைக்க படுமா???

நண்பர்களே....
நாம்
ஆவலுடன் எதிர்பார்க்கும் மக்களவை தேர்தல் முடிவுகள் நாளை இரவுக்குள் தெரிந்து விடும். அதற்குள் நடக்க வேண்டிய குதிரை பேரங்கள் முடிந்து, மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை எல்லாம் தொகுதியிலே விட்டு விட்டு, தனது தலைமை யாருக்கு வாக்களிக்க சொல்லுகிறதோ அவர்களுக்கு வாக்களிக்க போகிறார்கள் . வாக்களித்த மக்கள் அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்கு சென்றோ, இல்லை அவர்கள் வீட்டிலியோ நாமத்தை போட்டு கொள்ள தயார் ஆகி விடுங்கள்... ஏன் என்றால்,நாம் வாக்களித்த தலைவர் நம் தொகுதிக்கு வர இன்னும் ஐந்து ஆண்டுகள் ஆகும்(அட.... குறைந்த பட்சம் நம்புவோம்!!!).

எனது ஆவல் எல்லாம், எந்த தொகுதிக்கு போனாலும் இலங்கை பிரச்சனை பற்றி பேசிய ஜெயலலிதா அம்மையார், வைகோ, மருத்துவர் அய்யா மற்றும் சில சினிமா இயக்குனர்கள் எல்லாம் இலைக்கு வாக்களித்தால் தனி ஈழம் அமையும் என்று பேசினார்கள். போன தடவை கலைஞர் அவர்கள் தன் குடும்ப நலனுக்கும், தமிழக நலனுக்கும் டெல்லி வரை சென்று தனது தேவையை நிறைவேற்றி கொண்டார். ஆனால் இந்த முறை, அன்பர்களே அணி வென்றால் இலங்கை தமிழர் பிரச்சினையை முன் வைத்து வற்றி போன்ற பேரம் நடக்குமா? இல்லை தானும் அரசியலில் முதிர்ந்து வருகிறேன் என்று நிருபிக்க தமிழகத்தில் கலைஞர் ஆட்சி கலைக்க யார் முன் வருகிறார்களோ அவர்களுக்கு தனது அதரவை தர போகிறாரா????

No comments:

Post a Comment