நண்பர்களே....
நாம் ஆவலுடன் எதிர்பார்க்கும் மக்களவை தேர்தல் முடிவுகள் நாளை இரவுக்குள் தெரிந்து விடும். அதற்குள் நடக்க வேண்டிய குதிரை பேரங்கள் முடிந்து, மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை எல்லாம் தொகுதியிலே விட்டு விட்டு, தனது தலைமை யாருக்கு வாக்களிக்க சொல்லுகிறதோ அவர்களுக்கு வாக்களிக்க போகிறார்கள் . வாக்களித்த மக்கள் அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்கு சென்றோ, இல்லை அவர்கள் வீட்டிலியோ நாமத்தை போட்டு கொள்ள தயார் ஆகி விடுங்கள்... ஏன் என்றால்,நாம் வாக்களித்த தலைவர் நம் தொகுதிக்கு வர இன்னும் ஐந்து ஆண்டுகள் ஆகும்(அட.... குறைந்த பட்சம் நம்புவோம்!!!).
எனது ஆவல் எல்லாம், எந்த தொகுதிக்கு போனாலும் இலங்கை பிரச்சனை பற்றி பேசிய ஜெயலலிதா அம்மையார், வைகோ, மருத்துவர் அய்யா மற்றும் சில சினிமா இயக்குனர்கள் எல்லாம் இலைக்கு வாக்களித்தால் தனி ஈழம் அமையும் என்று பேசினார்கள். போன தடவை கலைஞர் அவர்கள் தன் குடும்ப நலனுக்கும், தமிழக நலனுக்கும் டெல்லி வரை சென்று தனது தேவையை நிறைவேற்றி கொண்டார். ஆனால் இந்த முறை, அன்பர்களே அணி வென்றால் இலங்கை தமிழர் பிரச்சினையை முன் வைத்து வற்றி போன்ற பேரம் நடக்குமா? இல்லை தானும் அரசியலில் முதிர்ந்து வருகிறேன் என்று நிருபிக்க தமிழகத்தில் கலைஞர் ஆட்சி கலைக்க யார் முன் வருகிறார்களோ அவர்களுக்கு தனது அதரவை தர போகிறாரா????
Friday, May 15, 2009
Friday, May 8, 2009
வோட்டு போடுளியோ வோட்டு.........
ஒரு வழியாக தேர்தல் நாள் பக்கமா வந்துடுச்சி. நம்ம ஊருக்கு புதுசு புதுசா யார் யாரோ வராங்க.. எங்க பார்த்தாலும் நம்மள பார்த்து கை எடுத்து கும்புடுரங்க... இதுவாச்சும் பரவ இல்ல்லேங்க.. வேற ஊருக்கு போன அந்த ஊர்ல கூட நமக்கு என்ன மரியாதை!!! எப்பவும் இதே மாதிரி எலெக்சன் நடந்தால் எவ்வளவு நல்லா இருக்கும்... சரி விஷயத்துக்கு வருவோம்... நம்ம ஓட்ட நாம போடாம விட்ட களவாணி பசங்க போட்டுட்டு போய்டுவானுங்க... அதனால நாம எங்க இருந்தாலும் ஊருக்கு பொய் ஓட்ட போட்டுட்டு வந்தரனும்.. கவலை படாதீங்க.. டிக்கெட் இல்லைன்னு பீலிங்க்ஸ் ஆ? சும்மா ஒரு போன் போட்டு நம்ம ஏரியா பசங்க காதுல டிக்கெட் இல்ல மச்சான் அதான் வர முடியலனு சும்மா சொல்லுங்க.. அப்புறம் பாருங்க, டிக்கெட் வீடு தேடி வரும் (மறந்திராம காச குடுத்துடுங்க பாஸ்....அவங்க ஓடி ஆடி வேலை செய்யறதுக்கே காசு ஒழுங்கா கிடைக்காது).
அப்புறம் காச வாங்கீட்டு வோட்டு போட்ராதீங்க.. அது தான் இருகிறதுலியே பெரிய தப்புன்னு சொல்றாங்க... (அவங்க MP ஆகி தப்பு பண்றதுக்கு நாம விதை போட்ட மாதிரி இருக்கும்.. இது நமக்கு தேவையா? )
அதே மாதிரி, உங்களுக்கு எல்லாருக்கும் 49'o' பற்றி தெரியும் தான? இல்லேன்னா இந்த சுட்டிய சும்மா ஒரு கிளிக் பண்ணுங்க...
http://en.wikipedia.org/wiki/49-ஒ
நன்றி,
செந்தில்.
அப்புறம் காச வாங்கீட்டு வோட்டு போட்ராதீங்க.. அது தான் இருகிறதுலியே பெரிய தப்புன்னு சொல்றாங்க... (அவங்க MP ஆகி தப்பு பண்றதுக்கு நாம விதை போட்ட மாதிரி இருக்கும்.. இது நமக்கு தேவையா? )
அதே மாதிரி, உங்களுக்கு எல்லாருக்கும் 49'o' பற்றி தெரியும் தான? இல்லேன்னா இந்த சுட்டிய சும்மா ஒரு கிளிக் பண்ணுங்க...
http://en.wikipedia.org/wiki/49-ஒ
நன்றி,
செந்தில்.
Subscribe to:
Comments (Atom)
