Tuesday, March 17, 2009

தனி ஈழமும் நம் இந்திய மக்களவை தேர்தலும்..

தனி ஈழம் கேட்டு போராடி வரும் நம் சகோதர மக்களக்கு நாம் இது வரை என்ன செய்து வந்து இருக்கிறோம் என்று பார்த்தால்..
1) ஆதரவு குரல்
2) நம்மால் முடிந்த பணம் மற்றும் பொருள் உதவி

இதற்கு மேல் என்று பார்த்தால் ஒன்றும் ஞாபகம் வர மாட்டன்கிறது என்பதை விட, அவ்வளவு தான் நம்மால் செய்ய முடியும்

ஆனால் நமக்கு இப்போது தேர்தல் என்னும் சக்தி கிடைத்துள்ளது.
இதை மிக சரியாக பயன் படுத்தி நல்ல தலைவரை, நல்ல கட்சியை, நல்ல அரசை நம்மால் தேர்ந்து எடுக்க முடியும்.

(நல்ல தலைவர், கட்சி என்பதற்கு ஈழத்திற்கு பாடு படும் அல்லது உண்மையாக பேசும் ஒருவரை அல்லது கட்சியின் கொள்கையை).

வாக்கு அளிப்பது எப்படி நமது கடமையோ அது மாதிரி நம் மக்களை காப்பாற்ற வேண்டியதும் நம் கடமையே.

எனவே வரும் தேர்தலில் தவறாமல் நமது வாக்கை பதிவு செய்து, நம் மக்களை காப்பாற்றுவோம்.

No comments:

Post a Comment